தமிழக சட்டசபையின் வரவுசெலவுத்திட்ட கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வரவுசெலவுத்திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார். கடந்த 8ம்திகதி தமிழக சட்டசபை செயலாளர் .பி.ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழ்நாடு சட்டசபையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 16ம்திகதி தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் சபாநாயகர் கூட்டவுள்ளதாகவும் அன்று 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் 2017-18-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளை மார்ச் 23ம்திகதி சட்டசபைக்கு அளிக்கவேண்டும் என ஆளுனர் தெரிவித்துள்ளார் எனவும் அதோடு, 2016-17-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையை மார்ச் 23ம்திகதி பேரவைக்கு அளிக்கவேண்டும் எனவும் ஆளுனர் உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.