நாட்டில் ஜனநாயகம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகமும் சுதந்திரமும் வெகுவாக அதிகரித்துள்ளது என பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று மிகவும் மிதமிஞ்சிய அளவில் ஜனநாயகமும் சுதந்திரமும் காணப்படுகின்றது எனவும் பாரிய கொள்ளைக்காரர்கள் வீரர்களைப் போன்றே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்ல மக்கள் கள்வர்களைப் போன்று வாழ்ந்து வருவதகாவும் ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அநேகமான ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதனையே செய்கின்றன எனவும் நாட்டு மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் எந்த வகையிலாவது தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.