முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணைகளின் அடிப்படையில் பசில் ராஜபக்ஸவை விடுவித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவம் பொறிக்கப்பட்ட சிங்கள பஞ்சாங்கங்களை அச்சிடுவதற்காக 29.4 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை
Mar 15, 2017 @ 04:52
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவம் பொறிக்கப்பட்ட சிங்கள பஞ்சாங்கங்களை அச்சிடுவதற்காக 29.4 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.