162
கிண்ணியாவில் இன்று புதன்கிழமை முதல் 3 நாட்களுக்கு அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையினையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனங்கள் , பாலர் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளநிலையில் பாடசாலைகளும் இன்றுமுதல் மூடப்படுவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை வழமை போன்று இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவில் கடந்த இரண்டு வாரத்தில் 4 பெண்கள் மற்றும்3 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love