172
போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த எட்டு பேரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு இலங்கையர்களும் போலி இந்தியக் கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த இலங்கையர்களுடன் நான்கு பிரித்தானியர்களும் இணைந்து கொண்டு சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love