சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி ரீடா இசாக் தெரிவித்துள்ளார். தாம் இலங்கைக்கு பயணம் செய்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிறுபான்மை சமூகத்தை பாதுகாப்பதற்கான மெய்யான அபிலாஸைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். காணாமல் போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, கைதுகள், சிவில் செயற்பாடுகளிலிருந்து இராணுவம் முழுமையாக விடுபடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்கம் அதிக கரிசனை காட்ட வேண்டுமேன தெரிவித்துள்ளார். இன ரீதியான முரண்பாடுகளை தடுக்க மட்டுமன்றி நல்லாட்சி நிலைநாட்டவும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.