ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வின் பேராளர்களுக்கு !
இலங்கையில் நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க முன்னெடுப்புகளின் நிலவரம் குறித்து வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் பகிரங்க மடல்
இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் 2015 ஒக்டோபர் 1ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பாக ஏற்கப்பட்ட தீர்மானம் 30/1 1 கால நீடிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ள தருவாயில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் 34 அமர்வின் பேராளர்களுக்கு எமது கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1. நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் குறைபாடுகள்:
1.1 அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டது:
இலங்கை அரசானது தீர்மானம் 30ஃ1 இன் நோக்கங்களை நிறைவேற்றுவதாக சர்வதேச சமூகத்துக்கு உறுதியளித்ததற்கமைய நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தை 18 மார்கழி 2015 அன்று அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஏற்படுத்தியது.2 இது பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்குகிறது. ஆனால் இந்த செயலகம் வெளிவிவகார அமைச்சரினால் வழிநடத்தப்படுகிறது. அவ்வகையில் இச்செயலகத்தைப் பொறுப்பேற்கும் பாராளுமன்ற அமைச்சகம் எது என்பதில் தெளிவான முடிவுகள் இல்லை.
1.2. சர்சதேச உரிமைசார் நியமங்களுக்கு அமைய உருவாக்கப்படவில்லை
நிலைமாறுகால நீதியின் பிரதான சட்டத் தூண்களான சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம3; ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒருங்கிணைப்புச் செயலகம் உருவாக்கப்படவில்லை.
1 Promoting reconciliation, accountability and human rights in SriLanka, 29 September 2015, UN Hunan Rights Council, Geneva, A/HRC/30/L.29,
https://documents-dds-ny.un.org/doc/UNDOC/LTD/G15/220/93/PDF/G1522093.pdf?OpenElement
2 http://www.scrm.gov.lk/about
3 Report of the Secretary-General, The rule of law and transitional justice in conflict and post-conflict societies, 23 August 2004, UN Security Council, S/2004/616,
https://www.un.org/ruleoflaw/blog/document/the-rule-of-law-and-transitional-justice-in-conflict-and-post-conflict-societies-report-of-the-secretary-general/
1.3. பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டதல்ல:
அத்துடன் ஒருங்கிணைப்புச் செயலகமானது இலங்கைப் பாராளுமன்றத்தினால் ஏற்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட எந்த ஒரு சட்டத்தின் கீழும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டதல்ல. எனவே இது சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட நீண்டகாலத்திற்கு செயற்படக்கூடிய அதிகாரமுடைய ஒரு கட்டமைப்பல்ல. இக்கட்டமைப்பினால் இதன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகம், உண்மை தேடும் ஆணைக்குழு, பொறுப்புக்கூறல் பொறிமுறைகள், இழப்பீட்டிற்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கவும் நீதிப் பொறிமுறைகளை உருவாக்கவும் முடியாதுள்ளது. அவ்வகையில் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் பாரிய ஸ்தம்பிதம் நிலவுவதற்குக் காரணம் சட்டபூர்வமானதும் அதிகாரங்களைக்கொண்டதுமான அரசியல் தலையீடற்ற சுயாதீனமான கட்டமைப்பு இன்மையே ஆகும். குறிப்பாக தீர்மானம் 30ஃ1 இனையும் இலங்கை மீதான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளையும் அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்புடைய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
1.4. நிலைமாறுகால நீதி சட்டத்தின் அவசியம்:
நிலைமாறுகால நீதிக்கான மேற்படி நான்கு பொறிமுறைகளுக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் நான்கு பொறிமுறைகளும் வௌ;வேறு அமைச்சகங்களுக்கு பொறுப்புக்கொடுக்கப்படுமாயின் அது ஒருங்கிணைந்த நிலைமாறுகால நீதி முன்னெடுப்பாக அமையாது. தற்செயல் (யன-hழஉ) நடவடிக்கைகளாகவே அமையும். இதனால் நிலைமாறுகால நீதியின் நோக்கங்களை அடைய முடியாது. எனவே இலங்கை அரசு நிலைமாறுகால நீதி சட்டத்தை கொண்டுவருவதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
1.5. மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி அமைச்சகத்தின் அவசியம்;
நிலைமாறுகால நீதி சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவருவதற்கும் பாராளுமன்றத்தின் மூலமாக இலங்கை மக்களுக்கு பொறுப்புக்கூறுவதற்குமான அமைச்சகம் அவசியம். எனவே இலங்கை அரசு உடனடியாக ‘மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி அமைச்சகம்’ ஒன்றை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
2. கலந்தாலோசனை செயலணியும் தேசிய கலந்தாலோசனையும்:
2.1 செயலணி அறிக்கை அரசால் ஏற்கப்படவில்லை:
நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனைக்கான செயலணியினால் முன்னெடுக்கப்பட்ட கலந்தாலோசனை நடடிவக்கைகள் பல சவால்களுக்கு மத்தியில் சிவில் அமைப்புகளினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. எனினும் மக்கள் கருத்துக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இறுதி அறிக்கையை ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது அரசின் பொறுப்புவாய்ந்த எந்தவொரு அதிகாரியோ உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொள்ளவில்லை. அரச கொள்கைகள் சார்ந்து தீர்மானமெடுக்கும் அதிகாரங்களற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களிடம் கையளிக்கும் நிலைசெயலணிக்கு ஏற்பட்டது.
4 அவ்வகையில் செயலணியின் பரிந்துரைகளை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்துவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டதாகவே காண்கிறோம்.
2.2 நீதி அமைச்சரால் செயலணி அறிக்கை புறக்கணிப்பு:
செயலணி இறுதி அறிக்கையை முன்வைத்தபின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச செயலணியில் தனக்கு நம்பிக்கை கிடையாது என அறிவித்தார். அத்துடன் கலந்தாலோசனை அறிக்கையின் பரிந்துரைகளை நாம் பின்பற்றத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.5 இது அரச தரப்பினர் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைக்காததையும் பொறுப்புக்கூறலைப் புறக்கணிப்பதையுமே காட்டுகிறது.
2.3. தொடர்;ச்சியான கலந்துரையாடலின் அவசியம்:
வடக்கு கிழக்கில் நேரடியாக வன்முறைகளால் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்தாலோசனை செயலணியின் செயற்பாடுகளையோ, நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளையோh அறியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை எதிர்கொண்டு வரும் அரச அடக்குமுறைகளை வெளிக்கொண்டுவருவது அவசியமாகும். அவர்களது குரலும் இணைக்கப்பட்டு நிலைமாறுகால நீதி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தேசிய கலந்தாலோசனை என்பது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். செயலணியும் இதைத் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
3. காணாமல்போன ஆட்களுக்கான அலுவலகமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை சார்ந்து அரசின் நிலைப்பாடும்:
3.1. நீதி விசாரணை கிடையாது, மீளநிகழாமை உறுதிப்படுத்தப்படவில்லை
நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான காணாமற்போனோர் அலுவலக சட்டமூலமானது பாதிக்கப்பட்டோர், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினரின் பங்கேற்பின்றி வெளிப்படைத் தன்மையற்ற முறையில் உருவாக்கப்பட்டு பிரதமரின் பணிப்புரைக்கு அமைய வர்த்தமானிப்படுத்தப்பட்டது. பின்னர் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. எனினும் இதுவரை இது நடைமுறைக்கு வரவில்லை. காரணம், இந்த அலுவலகத்தைப் பொறுப்பேற்குமாறு அரசாங்கத்தால் எந்த ஒரு அமைச்சகத்துக்கும் ஒப்படைக்கப்படவில்லை என்றே காண்கிறோம். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டிருப்பின் அதற்குரிய அமைச்சர் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக உத்தியோகபூர்வமாக வர்த்தமானி மூலம் அறிவிக்க பொறுப்புடையவராவார்.
இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் காணாமல்போனோர் அலுவலகமானது நீதி விசாரணை மேற்கொள்ளும் அதிகாரமற்ற ஒரு அங்கமாகும். நீதி விசாரணை
4 Consultation Task Force on Reconciliation handed over final report, Lanka Business Online, 5 January 2017, http://www.lankabusinessonline.com/consultation-task-force-on-reconciliation-handed-over-final-report/
5 I Have No Confidence in the CTF, 6 January 2017, Daily Mirror, http://www.dailymirror.lk/article/I-have-no-confidence-in-the-CTF-Wijeyadasa-121817.html
6 Final Report of the Consultation Task force on Reconciliation Mechanisms, Executive Summary and Recommendations, 17 November 2016, P-85 http://www.scrm.gov.lk/documents-reports
அதிகாரமற்றதாகவும் தகவல் அறியும் உரிமை அற்றதாகவும் உருவாக்கப்படுவதன் பிரதான காரணம் அரச படையினரைப் பாதுகாப்பதை உறுதிசெய்யவதற்காகும். இதை இவ்வலுவலகம் குறித்த கேள்வி பதில்களில் தெளிவாகக் காண முடியும்.7 சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாததால் அரசு அடுத்து என்ன திட்டத்தை வைத்திருக்கிறது என்பது சிவில் சமூகத்துக்கோ பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கோ தெரியாது.
25 மே 2016 அன்று ‘வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில்’ இலங்கை கைச்சாத்திட்டது. இந்த சமவாயத்தை உள்நாட்டில் சட்டமாக்குவதற்கான சட்டமூலமம் 9 பெப்ரவரி 2017 அன்று வர்த்தமானி அறிவித்தலுக்கு உள்ளானது.8 எனினும் இன்னும் பாராளுமன்றத்தால் இது சட்டமாக்கப்படவில்லை.
3.2. சாட்சிகளுக்கு பாதுகாப்பின்மை:
காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் நிலை குறித்து அரசு உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கான தேசிய அதிகாரசபையும் உருவாக்கப்பட்டுள்ளது.9 ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப உறுப்பினரை கண்காணித்தல், விசாரித்தல், அச்சுறுத்துதல் என்பன இன்றுவரை தொடர்கிறது.
எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் பணிக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை10 முழுமையாக நடைமுறைப்படுத்துவதே காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள் எதிர்பார்க்கும் நீதியையும், தகவல்களையும், இழப்பீட்டையும் ஓரளவுக்காவது நிறைவேற்ற முடியும் எனக்காண்கிறோம்.
4. பயங்கரவாதத் தடைச்சட்டம்:
பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது எதேச்சாதிகார கைதுகள், விசாரணையற்ற தடுத்துவைப்புகள், சித்திரவதைகள் உட்பட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தை அடிப்படையில் மீறுவதாக உள்ளது. இன்றுவரையிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள், விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதை நீக்கக்கோரி மனித உரிமை ஆர்வலர்களும் குறிப்பாக பாதிக்கப்படுகிற வடக்கு கிழக்கு மக்களும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பொதுக்கட்டளைகளை முன்வைத்துள்ளது.11 எனினும் அரசு ‘பயங்கரவாத முறியடிப்பு சட்டம்’
7 OMP: the Facts, http://www.scrm.gov.lk/faq-omp
8 International Convention for the Protection of All Persons from Enforced Disappearances, The Gazette of the Democratic Socialist Republic of Sri-Lanka, 9 February 2017, Department of Government Printing, Sri Lanka, http://documents.gov.lk/files/bill/2017/2/01-2017_E.pdf
9 National Authority for Victim and Witness Protection: The Public’s Right to Safety, Kaviratne,I.Y., 6 November 2016, http://www.sundayobserver.lk/2016/11/06/depth/national-authority-victim-and-witness-protection-public%E2%80%99s-right-safety
10 Report of the Working Group on Enforced or Involuntary Disappearances on its mission to Sri Lanka, 8 July 2016, Human Rights Council, A/HRC/33/51/Add.2, http://reliefweb.int/sites/reliefweb.int/files/resources/G1614663.pdf
11 Directives issued by the Human Rights Commission of Sri-Lanka on arrests and detention under the Prevention of Terrorism (Temporary Provision) Act No 48 of 1979, Human Rights Commission of Sri-Lanka, 18 May 2016, Colombo, http://hrcsl.lk/english/wp-content/uploads/2016/05/Directives-on-Arrest-Detention-by-HRCSL-E-.pdf
12 New counter-terror law triggers old fears in Sri Lanka: The Hindu, 27 October 2016, Daily News, http://dailynews.lk/2016/10/27/local/97288
எனும் ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்த முனைகிறது. எனவே, நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தராதரங்களுக்கு அமைய திருத்த வேண்டும். புதிய சட்ட உருவாக்கம் அவசியமற்றது.
5. அரசியல் கைதிகள்:
நீண்டகாலம் சிறைப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து பலவாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தும் அரசதரப்பு இதில் உரிய அக்கறைகாட்டவில்லை. 121 பேர் இன்னும் சிறைப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்களாவர். 70 பேர் பிணையில் விடப்பட்டுள்ளனர். எனவே மொத்தமாக 191 பேர் அரசியல் கைதிகளாக உள்ளன்.13 நீண்டகால சிறையிருப்பின் பாதிப்புகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் சட்டமா அதிபரை விழித்து வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையை14 கவனத்திற்கொள்வதுடன் சர்வதேச மனித உரிமை சட்டங்களையும் கவனத்திற்கொண்டு அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு ஆவண செய்யவேண்டும்.
6. பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளும் பாலியல் குற்றங்களும்:
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பெண்கள் மற்றும் சிறுமியர் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. பாடசாலை மாணவிகள் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாத அளவுக்கு பல்வேறு வடிவிலான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். 2015ஆம் ஆண்டு பொலிஸ் அறிக்கையின்படி வடக்கு கிழக்கு மாவட்டங்களில் 16 வயதுக்கும் கீழ்ப்பட்ட 135 சிறுமியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.15 பெண்கள் தாக்கப்படுவதும் கொலைசெய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. இவ்வருட ஆரம்பத்தில் யாழ்மாவட்டத்தில் ஏழுமாத கர்ப்பிணிப்பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.16 இதற்கெல்லாம் காரணம் சட்டம் ஒழுங்கு பேணப்படாததும், குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதி விசாரணைக்கு உட்படுத்துவதில் பொலிஸ் தரப்பு உரிய அக்கறைகாட்டாமை, பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு இன்மை போன்றனவாகும். அத்துடன் வடக்கு கிழக்கில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம் இன்மை, பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்களை ஆவணப்படுத்தவும் விழிப்புணர்வு ஊட்டவுமான பொறுப்பான அங்கம் இன்மை ஆகிய காரணிகளும் குற்றங்கள் வளரக் காரணமாகும். இலங்கை அரசு சீடோ சமவாயத்தில் கைச்சாத்திட்டிருந்தும் இன்னும் உள்நாட்டில் சீடோ சட்டத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பது பற்றிக்கூறும் சீடோவின் பொதுப் பரிந்துரை 19இனையும் தீர்மானம் 1325இனையும் உள்ளடக்கி சீடோ சட்டத்தை இலங்கை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.
13 Center for Human Rights and Development, Colombo
14 Press Communique, Human Rights Commission of Sri-Lanka, 27 November 2015, HRC Release of prisoners http://hrcsl.lk/english/wp-content/uploads/2015/11/HRCSL-Press-release-on-27-November-2015.pdf
15 Distribution of Grave Crime Abstract for the Year (2015) by police Division, Sri-Lanka Police, http://www.police.lk/images/others/crime_trends/2015/distribution_of_grave_crime_abstract_for_the_year_2015.pdf (the total was calculated by the reporters)
16 Pregnant woman found dead in Kayts, Times Online, 24 January 2017, http://www.sundaytimes.lk/article/1015698/pregnant-woman-found-dead-in-kayts
7. மகாண சபைகளின் அதிகாரத்தை குறைக்கும் அபிவிருத்தி சட்டமூலம்
துரித அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசினால் வர்த்தமானி செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி சட்டமூலமானது மாகாண சபைகளின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மட்டுப்படுத்துகிறது.17 இந்த சட்டமூலத்தின் 12வது உறுப்புரையானது இதற்குரிய அமைச்சரானவர் குறிப்பிட்ட மாகாணசபையின் முதலமைச்சரின் ஊடாக தாம் விரும்பிய ஏதேனும் ஓர் இடப்பரப்பை சுற்றுலாத்துறை, உயர் தொழிழ்நுட்ப விவசாயம் மற்றும் கடற்றொழில் உட்பட இன்ன பிறவற்றுக்காக பெற்றுக்கொள்ள முடியும் எனக்கூறுகிறது. அதன்படி, மாகாணங்களின் பொருளாதார நடடிக்கைகள் மாகாணங்களின் அதிகாரங்களிலிந்து அபிவிருத்தி முகவர் நிலையத்துக்கு மாற்றப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும். அவ்வகையில் மாகாணங்களுக்கான அரசியல் உட்பட பொருளாதார அபிவிருத்தியின் அதிகாரப்பரவலாக்கலை இந்த சட்டமூலம் தடுக்கிறது. அடிப்படையில் வடக்கு கிழக்கு சிறுபான்மையினர் கோரிவரும் அரசியல், பொருளாதார, நிர்வாக சுயாதீனத்துக்கு இச்சட்டமூலம் பாதகமாயுள்ளது.
8. வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையாக நடைபெறாமை மற்றும் இராணுவத்தின் நிலைகொள்ளல்:
இராணுவம் நிலைகொண்டுள்ள இடங்களில் மீள்குடியேற்றம் முழுமையாக நடைபெறவில்லை. கேப்பாப்புலவு, முள்ளிக்குளம் ஆகிய இடங்களை படையினர் முற்றிலும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மக்களை ‘அபிவிருத்தி கிராமங்கள்’ எனும் காட்டுப்பகுதிகளில் குடியமர்த்தியுள்ளனர். இந்த இடங்களில் படையினரதும் புலனாய்வாளர்களதும் நடமாட்டம் அதிகமாயுள்ளது. அதேபோல் வலிகாமம் வடக்கில் வளளாய், மாவிட்டபுரம் ஆகிய இடங்களில் குடியேற்றப்பட்டவர்கள் படையினரின் நடுவில் வாழ நேர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்த 100 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் இல்லாமல் ‘நல்லிணக்கபுரம்’ எனும் பெயரில் இராணுவத்தால் உருவாக்கப்பட்ட இராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.18 இன்னும் யாழ்மாவட்டத்தில் 30 இடைத்தங்கல் முகாம்களில் 1224 குடும்பங்களைச் சார்ந்த 4835 வாழ்கின்றனர். 7123 குடும்பங்கசை; சார்ந்த 28, 492 பேர் நண்பர்கள் உறவினர்களுடன் வாழ்கின்றனர். கிளிநொச்சி இரணை தீவைச் சேர்ந்த 184 குடும்பங்கள் தமது தீவில் மீளக்குடியேற கடற்படை இன்னும் இடமளிக்கவில்லை. இதைத் தவிர பல நூற்றுக்கணக்கான தனியார் காணிகளும், பொதுக்காணிகளும் இன்னும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நெடுந்தீவில் 23 தனியாருக்கு சொந்தமான 39 ஏக்கர் காணியும் அரசாங்க திணைக்களங்கள் மற்றும் பொது ஸ்தாபனங்களுக்குரிய 5 ஏக்கர் காணியும் அரச மற்றும் பொது ஸ்தாபனத்திற்குரிய இரண்டு கட்டிடங்களும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சாரப்பிட்டி என்ற இடத்தில் 12 நன்நீர் கிணறுகள் உள்ளன. இவற்றை முழுமையாக கடற்படையினரே பயன்படுத்துகின்றனர். 12,000 லீற்றர் கொள்ளளவு கொண்டபௌசர் மூலம் நாளொன்றிற்கு ஆறு தடவைகள் 72,000 லீற்றர் குடிநீரை கடற்பரைடயினர் தமது பயன்பாட்டுக்காக கொண்டுசெல்கின்றனர்.
மக்கள் காணிகள் அனைத்தும் உடன் மக்களுக்குத் திருப்பி வழங்கப்படுவதுடன் நட்டஈடும் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டுக்கான குடிநீர் வளங்களை படையினர் கட்டுப்படுத்தி வைத்திருப்பது நிறுத்தப்பட வேண்டும்.
17 Development (Special Provisions) Bill, The Gazette of the Democratic Socialist Republic of Sri-Lanka, 25 November 2016, Department of Government Printing, http://documents.gov.lk/files/bill/2016/11/141-2016_E.pdf
18 Civil Military Coordination Jaffna, http://www.cimicjaffna.com/Cimicnews_2017_03_12.php
9. இராணுவ மயமாதல்:
வடக்கு கிழக்கில் மக்களின் பொதுவாழ்வின் அனைத்துத் தளங்களிலும் இராணுவ மயமாதல் காணப்படுகிறது. பொருளாதார நடவடிக்கைகள், கல்விச்செயற்பாடுகள், கலாச்சார நிகழ்வுகள், குடும்ப நிகழ்வுகள் அனைத்திலும் இராணுவத்தினரின் தலையீடு செய்கின்றனர்.19 மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 22 பொருளாதார மையங்களை இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். அரச ஒப்பந்தங்களை எடுத்து கட்டுமான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடுவது வடக்கு கிழக்கு எங்கும் நடைபெறுகிறது. இதனால் உள்ளூர் தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் உட்பட உள்ளூராட்சிசபைகளும் பாதிக்கப்படுகின்றன. வடமாகாணத்தில் 588 முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவத்தால் நடாத்தப்படும் சிவில் பாதுகாப்புப் படையின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். இராணுவமயமாதல் சிவில் வாழ்வை பாதிப்பதோடு மக்களின் சுயாதீனமான வாழ்வுக்கு பாதகமாயுள்ளது. எனவே படைக்குறைப்பு என்பது அவசியம் என்பதை இங்கு வலியுறுத்துகிறோம்.
10. ஐ.நா. சமாதான நிதியம் இராணுவத்தால் பரிகரணம்:
உயர்பாதுகாப்பு வலயத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்காக ஐ.நா. சமாதான நிதியத்தின் ஒரு பகுதி நிதி இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பு மீள்குடியேற்ற அமைச்சாகும்.20 எனினும் வலிவடக்கில் இடம் பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை அமைப்பதற்கு இராணுவமே பொறுப்பாக உள்ளது.21 வலிவடக்கில் நல்லிணக்கபுரம் மாதிரிக் கிராமத்தின் வீடுகள் இராணுவத்தினால் கட்டப்பட்டுள்ளதுடன் அவ்வீடுகளில் இராணுவத்தின் படங்களும் மாட்டப்பட்டுள்ளன.
11. மனித உரிமைப் பாதுகாவலர்கள் அச்சுறுத்தப்படல்:
வடக்கு கிழக்கில் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் சிவில் அமைப்புகளைச் சார்ந்தவர்களையும் இராணுவத்தினரும் அரச புலனாய்வாளர்களும் தொடர்ந்தும் கண்காணிப்புக்கும் விசாரணைகளுக்கும் உள்ளாக்கி வருகின்றனர். அவர்களின் செயற்பாடுகள் பற்றி அறிவிக்க வற்புறுத்துகின்றனர். அத்துடன் பொதுமக்கள் மத்தியில் தமக்கு தகவல்களை வழங்குபவர்களை உருவாக்கி சிவில் அமைப்புகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்க அனுப்புகின்றனர். சிவில் அமைப்புகளில் செயற்படும் பெண் மனித உரிமையாளர்கள் புலனாய்வாளர்களால் பின்தொடரவும் விசாரிக்கவும்படுகின்றனர். ஊடகவியலாளர்களை வற்றுபுறுத்தி அச்சுறுத்தி அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுகின்றனர். இது அடிப்படையில் மனித உரிமைகளை சிதைக்கும் நடவடிக்கையாகக் காண்கிறோம்.
19 Civil Military Coordination Jaffna, http://www.cimicjaffna.com/cimicnewsmenuMain.php
20 Immediate Response Facility, United Nations Sri Lanka, http://lk.one.un.org/our-work/peacebuilding/immediate-response-facility/
21 Civil Military Coordination Jaffna, http://www.cimicjaffna.com/Cimicnews_2017_03_12.php
12. நீதிப் பொறிமுறையில் பாரபட்சம்:
நல்லிணக்கத்துக்கு நீதி அடிப்படையாகும். எனினும் இலங்கையின் நீதித்துறை பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகவே காண்கிறோம். இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் அரசியல் படுகொலைகள் ஜுரி முறை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்காது போகிறது. குமாரபுரம் கூட்டுப் படுகொலைகள் 22; மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்23 படுகொலை வழக்குகளில் உரிய சாட்சிகள் இருந்தும் குற்றவாளிகள் ஜுரிகளால் விடுவிக்கப்பட்டனர். இலங்கை அரசின் நீதிமுறை தமக்கு சார்பாக அமையாது என்பதாலேயே உரிமை மீறல்களுக்க உள்ளானோர் தொடர்ந்தும் சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி வருகின்றனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.
அடிப்படையில், இலங்கை அரசின் சமகால நிலைப்பாடுகளின் காரணமாக அரசில் நம்பிக்கை இழந்துள்ள வடக்கு கிழக்கு மக்கள் தமது கடந்தகால கசப்பான அரசியல் அனுபவங்களையும் கருத்திற்கொண்டு சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதனை கலந்தாலோசனைக்கான செயலணியின் அறிக்கையில் காண முடியும்.24 அதனடிப்படையில் இலங்கையில் நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கப்படவும், நிலையான நல்லிணக்கத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்டு பின்வரும் கோரிக்கைகளை தங்கள் முன்வைக்கிறோம்:
1. ஐ.நா. இலங்கையின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் இணைப்பங்காளியாவற்கு இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்
2. சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட நீதிப்பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்
3. நிலைமாறுகால நீதி சட்டம் உருவாக்கப்பட வேண்டும்
4. மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதிக்கான அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்
5. காணாமல் ஆக்கப்பட்டோர் பணிக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த ஆவணசெய்ய வேண்டும்
6. அரசியல் கைதிகள் விடுவிப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தி அமைத்தல் சார்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் கவனத்திற்கெடுத்து சர்வதேச தராதரங்களுக்கு அமைய இவற்றை நடைமுறைப்படுத்த ஆவணசெய்ய வேண்டும்
22 Kumarapuram Survivors called to Stop Impunity, 1 August 2016, Ground Views, https://www.facebook.com/notes/groundviews/kumarapuram-survivors-call-to-stop-impunity/10157204280430641/
23 Raviraj Murder: All accused released, Lakmal Sooriyagoda, 24 December 2016, Daily News, http://dailynews.lk/2016/12/26/law-order/102914
24 Final Report of the Consultation Task Force on Reconciliation Mechanisms, http://www.scrm.gov.lk/documents-reports
7. மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான புலன் விசாரணை நிறுத்தப்பட வேண்டும்
8. படையினர் வசமுள்ள மக்கள் காணிகளும்; பொதுக்காணிகளும் மக்களுக்கு மீள கையளிக்கப்பட வேண்டும். இராணுவ மயமாதல் நீக்கப்பட வேண்டும்.
9. தீர்மானம் 30ஃ1 மற்றும் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை தாமதமின்றி அமுலபடுத்த ஆவண செய்ய வேண்டும்
10. பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பது பற்றிக்கூறும் சீடோவின் பொதுப் பரிந்துரை 19இனையும் தீர்மானம் 1325இனையும் உள்ளடக்கி சீடோ சட்டத்தை இலங்கை விரைவில் ஏற்படுத்த வேண்டும்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு
இலங்கை
16 மார்ச் 2017
பிரதி: இலங்கை மனித உரிமைகள் ஆணையகம்