மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கமல் குணரட்னவின் நந்திக்கடல் வழியாக என்னும் நூலின் ஊடாக படையினர் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கடும்போக்காளர்கள் படையினர் பற்றி கூறிய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் விடயங்களே இந்த நூலில் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அவர் அண்மைய வரலாற்றில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் மிகவும் மோசமான ஆவணமே இந்த நூலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
படையினர் குற்றம் இழைக்கவில்லை என நாம் உலகம் முழுவதிலும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றோம், எனவும் இந்த நூலில் படையினர் குற்றம் இழைத்துள்ளதாக ஒப்புக் கொள்ளும் தகவல்கள் உள்ளடங்கியிருப்பதாகவும் கமல் குணரட்னவின் நூலை, தமிழ் கடும்போக்குவாதிகள் வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.