கலப்பு நீதிமன்றம் தொடர்பில் எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை எனவும், குறிப்பாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்படுவதற்கு எவ்வித நிபந்தனையையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு விதிக்கவில்லை எனவும், உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கலப்பு நீதிமன்றம் பற்றி எவ்வித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது வெளிநாட்டு நீதவான்களின் உதவி மற்றும் நிதி பெற்றுக்கொள்ளப்பட முடியும் என்ற போதிலும் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.