இலங்கையில் அரசாங்க வேலையிலுள்ள பெண்கள் மகப்பேறின்மை தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுவதற்காக சலுகை விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட பெண் அரசு அலுவலர் ஒருவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ சிகிச்சை பெறும் வகையில் ஒரு வருடத்திற்கு சம்பளமற்ற விடுமுறை எடுத்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பொது நிர்வாக அமைச்சு இது தொடர்பான சுற்றறிக்கையை சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபுணரின் பரிந்துரையின் பேரில் இந்த சலுகை விடுமுறையை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.