அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கலுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது நேட்டோ கூட்டணியை பலப்படுத்தல் மற்றும் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக செயற்படுதல் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எனினும், வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பில் ஜேர்மன் அதிபர் அன்ஞலா மேர்க்கலுக்கு கைலாகு செய்ய டொனால்ட் ட்ரம்ப் மறுத்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், குறித்த சந்தர்ப்பத்தில் சிறு அசௌகரிய நிலைமையொன்று ஏற்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.