ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென் வெளியிடப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையானது, இம்முறையும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரேரணைக்கு இதுவரை 12 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில், மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை இலங்கையில் ஊக்குவித்தல் எனும் தலைப்பில் முன்வைக்கப்படவுள்ள குறித்த பிரேரணையில் 2015ஆம் ஆண்டு பிரேரணையை அமுல்படுத்த 2019ஆம் ஆண்டுவரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் நல்லிணக்கத்தையும், பொறுப்புக் கூறலையும் முன்னெடுப்பதற்காக உறுப்பு நாடுகள் இணை அனுசரணை வழங்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.