டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காத்தான்குடி, நூறாணியா பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் நேற்றையதினம் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முதலாம் தர மாணவியான 6 வயதுடைய உதயராஜன் அஞ்சனா என்ற சிறுமியே, இவ்வாறு உயிரிந்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.