தமிழ், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியில் இணையவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நடிகை ரம்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளரான இவர், கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். கடந்த 2014இல் அதே தொகுதியில் தோல்வி அடைந்த ரம்யா, கட்சி நடவடிக்கைகளிலிருந்து இருந்து ஒதுங்கி இருந்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து ரம்யாவும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை கர்நாடக பாஜக தலைவர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.