151
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கே இவ்வாறு நட்ட ஈடு வழங்கப்பட உள்ளது.
குறித்த காலப்பகுதியில் கடத்தப்பட்ட , தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட உள்ளது எனவும் இவ்வாறு நட்டஈடு வழங்கும் நோக்கில் அரசாங்கம் குழுவொன்றை நியமித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்கினர் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love