ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பல நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் வகையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘நல்லிணக்கம், பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமை ஆகியனவற்றை மேம்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உத்தேச வரைவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மொன்டன்கிரோ, மெசிடோனியா, பிரித்தானியா, வடஅயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு அனுசரணை வழங்குகின்றன. மேலும், அவுஸ்திரேலியா, கனாடா, ஜெர்மனி, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் நோர்வே உள்ளிட்ட நாடுகளும் இதற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.