196
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதான கர்ப்பிணிப்பெண் ஒருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இத்துடன் 15 ஆக அதிகரித்துள்ள நிலையில் இதுவரையில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியர்களின் எண்ணிக்கையும் 3881 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love