159
புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சில அடிப்படைவாதிகள் செய்து வரும் போலிப் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தில் அவ்வாறான எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தங்களது மத வழிபாடுகளை மேற்கொள்ள உதவுமாறு அனைத்து தரப்பினரும் கோருகின்றனர், இதனையே மாநாயக்க தேரர்களும் கூறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்க ஆட்சியில் நாட்டின் ஐக்கியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love