166
டெங்கு பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திருகோணமலை கிண்ணியா வலயப் 66 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கிண்ணியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தமையால், மூன்று மாணவர்கள் இந்த நோய்க காரணமாக உயிரிழந்ததுடன் மேலும் சில மாணவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தற்காலிகமாக குறித்த பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அப் பகுதியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love