307
யாழ். வடமராட்சி பகுதியில் வயோதிபர் மீது கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் வயோதிபர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வடமராட்சி அல்வாய் மகாத்மா வீதியை சேர்ந்த கு. கந்தசாமி (வயது 72) எனும் வயோதிபரே தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.
குறித்த வயோதிபரின் வீட்டுக்கு ஞாயிறு இரவு மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று வயோதிபரை வீட்டுக்கு வெளியே அழைத்து வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love