தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கக்க வேண்டும் எனக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆறு ஆண்டுகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்றால் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறை சென்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்டோர் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.