167
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளதுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களை நீதிமன்றில் முன்னலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love