புனித நதிகளாக கருதப்படும் கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு மனிதர்கள் என்ற அந்தஸ்தை உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. தற்போது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவு மாசடைந்துள்ள இந்த நதிகளை மாசுபடுத்துவதில் இருந்து பாதுகாக்க இந்த சட்டபூர்வ அந்தஸ்து உதவும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நதிகள் பற்றிய இந்துக்களின் ஆழமான நம்பிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களை நதிகளுடன்இணைக்க இந்த தீர்ப்பு உதவியாக இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின் வான்கானுய் நதிக்கு சட்டப்பூர்வமாக மனித அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு வாரத்தில்இந்த தீர்ப்பு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.