ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக இலங்கைப் பேரவை என்னும் அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள தேசியவாத அமைப்புக்களும் புலம்பெயர் சிங்கள அமைப்புக்களும் இணைந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தொடர்பில் அல் ஹூசெய்ன் பின்பற்றி வரும் அணுகுமுறை குறித்து விசாரணை நடத்த விசாரணையாளர் ஒருவரை நியமிக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு விசாரணை நடத்தப்படும் வரையில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவியல் தீர்மானம் நிறைவேற்றப்படுவது இடைநிறுத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் பிரதிகள் ரஸ்யா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளின் ராஜதந்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.