டொனால்ட் ட்ராம்பின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படுவதாக எப்.பி.ஐ. உளவுப் பிரிவின் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி ( James Comey )தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கும், ரஸ்யாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்த விசாரணைகள் மாதக் கணக்கிற்கு நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் போது ரஸ்யா அதில் தலையீடு செய்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரது மின்னஞ்சல்களுக்குள் ஊடுருவுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரஸ்யா, அமெரிக்கத் தேர்தலில் தலையீடு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை ரஸ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.