புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு 98 சதவீத விசாரணைகள் முடிவடைந்து விட்டதாக ஊர்காவற்துறை நீதிவான் தெரிவித்தார்.புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதன் போதே நீதிவான் அவ்வாறு தெரிவித்தார்.
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.