166
2007ம் ஆண்டு ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் இந்து அமைப்பைச் சேர்ந்த பவேஷ் பட்டேல் மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய இருவருக்கு தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் பவேஷ் பட்டேலுக்கு 10 ஆயிரம் ரூபாயும் குப்தாவிற்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு ரம்ஜான் நோன்பு திறக்கும் நேரத்தில் மக்கள் கூடியிருந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்திருந்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love