இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன் வெளியிட்ட அறிக்கையை, பிரித்தானியா வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வில் உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
2015 ஜெனீவா தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், அதன் மந்த நிலைகுறித்தும் இந்த அறிக்கையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் பொறுப்புக்கூறும் பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கு, கலப்பு நீதிமன்றம் குறித்த அழுத்தம் தொடரும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் இன்னும் பல கருமங்களை செய்ய வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.