இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்ப பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் சில இலக்குகள் சில கால வரையறைகளின் அடிப்படையிலான இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத் திருத்தம், பாராளுமன்றம் அரசியல் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டமை உள்ளிட்ட சில விடயங்களில் முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் இதனை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இதனை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் கால மாறு நீதிப்பொறிமுறைமை மிகவும் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் ஆகிய விடயங்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.