#இங்கிலாந்தின் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் காவற்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாராளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்து தாக்குதல் நடத்தியிருந்த குறித்த நபர் இ தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக பாதசாரிகள் மீது வாகனத்தை மோதச் செய்து பலரை காயப்படுத்தியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினால் கவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவராலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊகம் வெளியிடப்பட்டுள்ள போதும் உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மே உள்ளிட்டவர்கள் இருந்த போதும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.லண்டனில் பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் தற்பொழுது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.