கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப்பின் தெற்காசிய பிராந்தியத்தியத்திற்கான பணிப்பாளர் ஜீன் கப் உட்பட அவரது பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்,
இதன் போது கிழக்கு மாகாணத்தில் வறுமை காரணமாக இடை விலகிய மாணவர்கள் மற்றும் போர்சூழல் காரணமாக கணவனை இழந்தவர்களின் பிள்ளைகள் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் குறித்த சிறுவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு யுனிசெப் நிதியுதவி வழங்க வேண்டுமென ஜீன் கப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.