157
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளின் போது அரசாங்கம், அரசியல் சாசனத்தை மீறாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலமாறு நீதிபொறிமுறையில் கலப்பு நீதிமன்ற விசாரணை என்ற விடயத்தை உள்ளடக்க முடியாது என தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இது குறித்து தெளிவான நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கிய நீதிவிசாரணைப் பொறிமுறைமையானது நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது எனவும் எனவே அவ்வாறான ஓர் விசாரணைப் பொறிமுறைக்கு அரசாங்கம் ஆதரவளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love