Home இலங்கை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by admin


ஊர்காவற்துறை கர்ப்பிணி படுகொலை வழக்கின் சந்தேகநபர்களான சகோதர்கள் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது.  ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  போது  வழக்கு விசாரணையை அடுத்து வழக்கினை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்கஉத்தரவு இட்டார்.

வழக்கின் பின்னணி

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதர்களான இரு நபர்கள் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்துறை காவல்துறையின் காவலரணில் கடமையில் இருந்த காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More