இலங்கை – ரஷ்ய இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இன்று இரு நாட்டு அரச தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மீன்பிடி ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யாவிற்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே இவ்வாறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அமைச்சர்களான மங்கள சமரவீர, எஸ்.பீ.திஸாநாயக்கா, சுசில் பிரேம ஜயந்த, ஜோன் அமரதுங்க, தயாசிறி ஜயசேகர, பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த ரஷ்ய பயணத்தில் இணைந்துள்ளனர்.