அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் என அமெரிக்கா வழங்கியுள்ள பட்டியலை ஏற்க முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக 271 இந்தியர்களின் பட்டியலை அந்நாடு வழங்கியுள்ளது எனவும் எனினும் முழு விபரங்கள் இல்லாமல் குறித்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த பட்டியலை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முழு விவரங்கள் வழங்கப்பட்டு அந்த தகவல்களை; சரிபார்த்த பின்னர் அவர்கள் இந்தியர்கள் என்பது உறுதியானால் அவசரமாக அங்கிருந்து வெளியேறுவதற்காக தாங்கள் சான்றிதழை வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் வந்த பின்னர் அந்நாட்டு கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதென தெரிவிப்பது சரியாக இருக்காது எனவும் தெரிவித்த அவர் அங்கு வசிக்கும் இந்திய பிரஜைகள் மற்றும் திறமையான தொழில் நிபுணர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கவலையளிப்பதாக உள்ளதாக அதிகமானோர் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய மென்பொருள் பொறியாளர்களை பெரிதும் பாதித்துள்ள எச்1பி விசா குறித்து அமெரிக்க அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.