கச்சத்தீவை மீட்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி, ‘தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடித்துக்கொள்ளலாம் எனவும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழாவில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது எனவும் கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கின்ற நிலையில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்து உத்தரவிடப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றில் நிலுவையில் உள்ளநிலையில், மீனவர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றில் உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
குறித்தவழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு , சட்ட அமைச்சு மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.