12 நாட்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் இருவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளதனை அங்கு ஒரு பதட்டமான நிலைய தோன்றியுள்ளது.
வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபா நிவாரணம் வழங்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 84 விவசாயிகள் கடந்த 12 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சில விவசாயிகள் மரத்தின் மீதேறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததனையடுத்து அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் பலரின் கோரிக்கையை ஏற்று அனைவரும் கீழே இறங்கி வந்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளை அகதிகளைப் போல நடத்துவதாகவும் தங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்