அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததால் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்ட சுகாதார சட்டத்துக்கு எதிரான டொனால்ட் டிரம்பின் காப்பீட்டு மசோதா தோல்வி அடைந்தது.
மிக மலிவான செலவில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஒபாமாவினால் கொண்டுவரப்பட்ட சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கு ஒபாமா கெயர் என பெயரிடப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றிருந்தது.
எனினும் அதனை ரத்து செய்யும் வகையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் கொண்டு வந்ததுடன் ஒப்புதல் பெறுவதற்காக பாராளுமன்றத்தில் மசாதா தாக்கல் செய்யப்பட்டது.
இதன்மீதான வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் குறித்த மசோதா தோல்வியடைந்துள்ளது. குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் 215 வாக்குகள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் 28 முதல் 35 வாக்குகள் குறைவாக கிடைத்தமையால் மசோதா தோல்வியடைந்துள்ளது.
அமெரிக்காவில் தற்போதைய பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் ஆளும் குடியரசு கட்சி நாடாளுமனற் உறுப்பினர்களே பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.