167
எரிபொருளை சந்தைக்கு நிரம்பல் செய்வதனை வரையறுப்பது குறித்து ஆராயப்பட உள்ளது. ஒபெக் நாடுகளும் ஒபெக்கில் அங்கம் வகிக்காத எரிபொருள் உற்பத்தி நாடுகளும் இவ்வாறு தீர்மானித்துள்ளன. ஏற்கனவே எரிபொருட்களை சந்தைக்கு விநியோகம் செய்வதனை வரையறுக்கும் இணக்கப்பாடு ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் எரிபொருட்களை சந்தைக்கு நிரம்பல் செய்வதனை மேலும் ஆறு மாத காலத்திற்கு வரையறுப்பது குறித்து ஆராயப்பட உள்ளது.
சந்தையில் விலையை சீராக பேணும் நோக்கில் விற்பனை செய்யும் நாடுகள் காலத்திற்கு காலம் கூடி இவ்வாறான தீர்மானங்களை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love