ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவின் கைது விவகாரத்தில் தலையீடு செய்யப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தாலும் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நீதிமன்ற விவகாரங்களில் தலையிடாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாரிய குற்றச் சாட்டுக்கள் விமல் வீரவன்ச மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றமே இது குறித்து தீர்மானம் எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதியோ அல்லது வேறும் எவரோ நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பிணை மனு மறுக்கப்பட்ட காரணத்தினால் விமல் வீரவன்ச, உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது