152
மணிப்பூரில் நீரோடைக்குள் பேருந்து பாய்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலில் இருந்து 40 பயணிகளுடன் இன்று அதிகாலை புறப்பட்ட பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வீதியின் ஓரத்தில் உள்ள நீரோடைக்குள் பாய்ந்தமையினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 25-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Spread the love