ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பல தரப்பினராலும் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் இன்று இந்திய மத்தியஅரசானது திட்டத்துக்கு அனுமதி வழங்கி 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அதேநேரம், நெடுவாசல் மக்களின் சந்தேகங்களை தீர்த்தபின்னர் திட்டப்பணிகள் தொடங்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதுமாக 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில் அதற்கெதிராக 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்றையதினம் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் இன்று டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.