194
யுத்தம் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தம் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை கொலை செய்திருந்தால் அவ்வாறானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் என்பது இரண்டு பக்கங்களுக்கும் சமனிலையானதாகவே இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love