கோட்டை புகையிரத நிலையம் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனகசபை தேவதாசன் எனப்படும் நாதன் என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் கோட்டை புகையிரத நிலையத்தின் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த உதவியதாக நாதன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். தாக்குதல் சம்பவத்தில் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் எட்டு மாணவர்களும் பேஸ்போல் அணி பயிற்றுவிப்பாளரும் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைப் போராளி ஒருவர் குறித்த தாக்குதலை நடத்தியிருந்தார்.