161
தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப்பேறுகளில் இதுவரை இணையத்தளங்களில் பார்வையிட்டமைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் ஏழு மாணவர்களுக்கு ஒன்பது ஏ பெறுபேறுகளும், 32 மாணவர்களுக்கு எட்டு ஏ பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஒன்பது பாடங்களிலும் ஏ பெறுபேறுகள் பெற்ற மாணவர்களில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்களும். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இரண்டு மாணவர்களும், சென்திரேசா பெண்கள் கல்லூரியில் இரண்டு மாணவிகளும் பெற்றுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 32 மாணவர்களுக்கு எட்டு பாடங்களிலும் ஏ பெறுபேறுகளும், 21 மாணவர்களுக்கு ஏழு பாடங்களிலும் ஏ பெறுபேறுகளும், 21 மாணவர்களுக்கு ஆறு ஏ பெறுபேறுகளும், 23 மாணவர்களுக்கு ஜந்து ஏ பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு இதவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படியே மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Spread the love