எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றார் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் தொலைபேசி சமிக்ஞை தூண் ஒன்றைப் போன்று செயற்பட்டு வருகின்றார் என கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சிலர் ஆளும் கட்சியுடன் கொண்டுள்ள ஆபத்தான உறவு நாட்டுக்கு பாதக நிலையை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள அவர் அமிர்தலிங்கம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முன்னுதாரணமாக கொள்ளவில்லை எனவும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கு கொள்கையில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் கிடைத்துள்ளதாக அரசாங்கம் கூறினாலும் இன்னமும் அவ்வாறு இலங்கைக்கு சலுகைத் திட்டம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.