துருக்கியின் அரச வங்கியொன்றின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. துருக்கியின் ஹல்பான்க் (Halbank ) என்ற அரச வங்கியின் சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி ஒருவருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களில் இந்த துருக்கி அதிகாரி ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் மேமற் காகன் அற்றில்லா (Mehmet Hakan Atilla )கைது செய்யப்பட்டுள்ளார். ஈரான் அரசாங்கத்தின் சார்பில் சட்டவிரோதமாக அமெரிக்க வங்கிகளுடன் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாகக் இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துருக்கியின் பிரபல தங்க வர்த்தகர் ரெஸா ஸெராப் என்பவருடன் இணைந்து சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.