185
உத்தர பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் விரைவு புகையிரதம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து டெல்லி நிஜாமுதீன் நோக்கி நேற்று இரவு புறப்பட்டுச் சென்ற குறித்த புகையிரதம் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை விசாரணைகள் தொடர்கின்றன
Spread the love