148
அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகள் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக அமுல்படுத்துவதாக இலங்கை வாக்குறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நீதவான்கள் இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் பங்கேற்கப் போவதில்லை என கூறப்பட்டாலும், வெளிநாட்டு நீதவான்கள் விசாரணைகளில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love