ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதலுடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் மற்றும் ஐந்து இராணுவ வீரர்களுக்கே கல்கிஸ்ஸ நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.
தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் குறித்த 6 பேரும் வேறொரு வழக்கில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் கீத் நொயார் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகததன் காரணமாக இன்று இடம்பெறவிருந்த அடையாள அணி வகுப்பு பிற்போடப்பட்டுள்ளது. கீத் நொயார் இன்றையதினம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாவே அடையாள அணி வகுப்பு பிற்போடப்பட்டுள்ளதுடன் விசாரணை எதிர்வரும் ஜீன் 1ம்திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது